ஊரடங்கு சமயத்தில் 1,150 டன் மருத்துவ பொருட்களை கொண்டு சென்றுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Image

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அத்யாவசிய போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் தவிர அனைத்து விதமான பயணிகள் ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவ பொருட்களை ரயில் மூலமாக கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் இதுவரை 1,150 டன் மருத்துவ பொருட்களை ரயில்வே கொண்டு சென்றதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
Image
இதில் அதிகபட்சமாக வடக்கு ரயில்வே சுமார் 400 டன் பொருட்களை ஏற்றி சென்றுள்ளது. அதனை தொடர்ந்து மேற்கு ரயில்வே 328.84 டன் பொருட்களையும், மத்திய ரயில்வே 136 டன் பொருட்களையும் ஏற்றி சென்றுள்ளது.

தெற்கு ரயில்வே 83.13 டன் மருத்துவ பொருட்களை ஏற்றி சென்றுள்ளது.