Image result for train bridges

மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய ரயில் பயணங்களை அபாயகரமானதாக பார்க்கச் செய்யும் இந்தியாவின் 10 ரயில் பாலங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
www.tnrailnews.in
ஜம்மு காஷ்மீர்
Image result for jammu udhampur railway line

ஜம்மு - கத்ரா தடத்தில், 20 சுரங்கப் பாதைகள், 158 பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில், மன்வல் ரயில் பால பயணமும் பலருக்கு அச்சத்தை தரக்கூடிய ரயில் பயணமாகவே அமையும். ஏனெனில், இந்த ரயில் வழித்தடம் அதிக நில அதிர்வு ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளதே முக்கிய காரணம்.
www.tnrailnews.in
ராயகடா - கோரபுட் (ஒரிசா)
Image result for rayagada koraput train

ராயகடா- கோராபுட் இடையிலான ரயில் வழித்தடம் இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடமாக குறிப்பிடப்பட்டாலும், இதிலுள்ள பாலங்கள் மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் நிலச்சரிவு ஆபத்தும் அதிகம் என்பதே இதற்கு காரணம். இந்த வழித்தடத்தில் உள்ள ஒரு அபாயகரமான பாலத்தை படத்தில் காணலாம்.
www.tnrailnews.in
தூத் சாகர்(கோவா)
Image result for dudhsagar falls train

Image result for dudhsagar falls train

கோவாவிலுள்ள தூத்சாகர் அருவி விழும் இடத்தை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பாலமும் மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. மத்கான் - கேஸ்டல் ராக் தடத்தை இணைக்கும் ரயில் வழித்தடத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த ரயிலில் பயணித்தவாறே, தூத் சாகர் அருவியை காண பலர் பயணிக்கின்றனர். ஆனாலும், ஆபத்தான ரயில் பாலமாகவே குறிப்பிடப்படுகிறது.
www.tnrailnews.in

பன்வெல்(மகாராஷ்டிரா)
Image result for panvel train bridge

Image result for panvel train bridge

பான்வெல் ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாகவே குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான இதற்கு 1995ல் சிறந்த கான்கிரீட் கட்டுமானம் கொண்ட வடிவமைப்பாக சிறப்பிக்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்லும்போது, ரயில் பயணிகள் அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வை பெறுவர்.
www.tnrailnews.in

காசரா காட்(மகாராஷ்டிரா)
Image result for kasara ghat train

Image result for kasara ghat train

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை- நாசிக் நகரங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் காசரா காட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாவகே இருந்து வருகிறது. பக்கவாட்டில் எந்த தடுப்பும் இல்லாமல் அந்த ரயில் பாலத்தை ஒவ்வொரு முறையும் அச்சத்துடனே கடந்து வருகின்றன ரயில்கள்.
www.tnrailnews.in

கங்கரா(பஞ்சாப்)
Image result for kangra valley train

பதான்கோட் நகரையும், இமாச்சலப்பிரதேச மாநிலம், ஜோகிந்தர் நகரையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தடத்தில் பல அபாயகரமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல பாலங்களில் தடுப்பு இல்லாமல் வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பயணம் அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.
www.tnrailnews.in

சக்லேஷ்பூர்- சுப்ரமண்யா(கர்நாடக)
Image result for sakleshpur train

மங்களூர்- ஹாசன் இடையிலான ரயில் வழித்தடத்தில் சக்லேஷ்பூர்-சுப்ரமண்யா மலைப்பகுதியிலுள்ள ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாகவே குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த ரயில் வழித்தடமும் நிலச்சரிவு ஆபத்தில் அடிக்கடி சிக்குண்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
www.tnrailnews.in

நீலகிரி மலை ரயில்(தமிழ்நாடு)
Image result for nilgiri mountain railway


Image result for nilgiri mountain railway

Image result for nilgiri mountain railway


தமிழகத்தில் பலருக்கும் பிடித்தமான நீலகிரி மலை ரயில் பாதையிலும் பல அபாயகரமான பாலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த ரயில் வழித்தடத்தில் பலரும் தவம் கிடந்து ஏறினாலும், சில பாலங்கள் அச்சத்தை வழங்குவதாக அமைகிறது. இந்த ரயில் வழித்தடத்திலும் நிலச்சரிவு ஆபத்து அதிகமிருக்கிறது.
www.tnrailnews.in

லும்திங் - பதர்பூர்(அசாம்)
Image result for lumding badarpur train

\லும்திங் பதர்பூர் மலைப்பகுதி ரயில் வழித்தடம் மிகுந்த ஆபத்துக்களை கடந்தே பயணிக்கிறது. இந்த வழித்தடமும் இந்தியாவின் மிகவும் ஆபத்தான ரயில் வழித்தடமாகவும், இதிலுள்ள பாலங்கள் மிகவும் அபாயகரமானதாகவும் குறிப்பிடப்படுகிறது.
www.tnrailnews.in

பாம்பன்(தமிழ்நாடு)
Image result for pamban bridge

நூற்றாண்டு கண்டுவிட்ட, தமிழகத்திலுள்ள பாம்பன் ரயில் பாலம்தான் இந்தியாவிலேயே மிக பழமையானதும், மிகவும் அபாயகரமான ரயில் பாலங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் மிகவும் அபாயகரமான ரயில் பாலமாக குறிப்பிடப்படுகிறது.

Image Credits - Google Image search