ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் | Precautionary measure taken at trains in Platforms and in Railway premises

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தெற்கு ரயில்வே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மதுரை கோட்ட மேலாளர் திரு. வி. ஆர். லெனின் மற்றும் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்  டாக்டர் ஆர். ஜே. பாஸ்கர், அவர்களின் மேற்பார்வையில்மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வைரஸ்  பாதித்ததாக சந்தேகப்படும் நபர்களின் சிகிச்சைக்காக தனியாக மருத்துவ படுக்கைகள் அரசரடி இருப்புப்பாதை பணியாளர் பயிற்சி மையம், திருப்பரங்குன்றம் எந்திரவியல் தொழிலாளர் பயிற்சி மையம், திண்டுக்கல், திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஓய்வு அறைகள், விருதுநகர் போக்குவரத்து தொழிலாளர் பயிற்சி மையம், மதுரை ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.  ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு தகவல்கள் ரயில்நிலையங்களில் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சார சுவரொட்டிகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த வைரஸ் பாதிப்பை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ரயில்வே மருத்துவர்கள் தமிழக அரசு மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து முக்கிய ஆலோசனைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ரயில் நிலையங்கள், ரயில்களை சுத்தப்படுத்தும் பணியின் கால இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக ரயில் பெட்டிகள் வாயில்களில் உள்ள கைப்பிடிகள் ரயில்வே ஓய்வு அறையில் உள்ள கதவு கைப்பிடிகள் ஆகியவை தொடர்ந்து சுத்தப்படுத்தப் படுகின்றன. ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்வே தொழிலாளர் பணியிடங்களில் அதிகமான கிருமிநாசினி கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 
‌ ‌

Precautionary measure taken at trains in Platforms and in Railway premises

Southern Railway, takes all precautionary measures against coronavirus. As per the directives of Shri V.R. Lenin, Divisional Railway Manager and Dr. Bhaskar, Chief Medical Superintendent, created a separate isolation ward at Madurai divisional area  for handling suspected coronavirus cases viz. Railway Training Institute at Arasaradi 24 beds,  Railway Basic Training Centre at Tiruparankundram 13 beds, RPF barracks at Dindigul 22 beds, at Tirunelveli 26 beds,   Multi-disciplinary divisional training institute at Virudhunagar 25 beds and in the Madurai Divisional Health Unit  16 beds for Male/Female and Children. 

Regular public announcements at all important railway stations are being made to create awareness among the passengers and the employees about the preventive measures to stop the spread of coronavirus. A separate Information Education and Communication (IEC) material on coronavirus, displayed at important locations in all major stations in the division written in local language. “Machinery has been put in place for monitoring any suspected cases at different railway stations in divisional level. Railway medical in-charges are in constant touch with state and district authorities to obtain guidelines on the subject and take necessary detective, preventive and curative measures suggested by them.   Maintaining cleaning frequency on trains and at stations, sometimes on hourly basis and will increase the use of disinfectant to wipe down handrails, doorknobs, handles and restrooms.  Additional antibacterials products, including sanitizers and wipes, will be provided at stations, on trains and in employee work areas.