பயணிகள் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு : ரயில்வே அறிவிப்பு | Extended Cancellation of Passenger Train services and closure of ticket counters


கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்து, இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. 

மேலும் மார்ச் 21-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை திரும்பப் பெறுவதிலும் சில சலுகைகளை அறிவித்தது.

ரயில்கள் ரத்து நீட்டிப்பு

இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி இரவு 12மணி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்து, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் புறநகர் ரயில்களும், மெட்ரோ ரயில்களும் ஏப்ரல் 14ம் தேதி இரவு 12மணி வரை இயங்காது.

முன்பதிவு மையங்கள் செயல்படாது.

பி.ஆர்.எஸ்., யுடிஎஸ் டிக்கெட் கவுண்டர்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த கால கட்டத்தில் முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் கவுண்டர்களில் புதிய முன் பதிவு எதுவும் செய்யப்படாது. இருப்பினும் ஐ.ஆர்.சி.டி.சி. வலைத்தளத்தின் மூலம் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு கிடைக்கும். மேலும் யு.டி.எஸ். ஆன் மொபைல் பயன்பாடும் ஏப்ரல் 14ம் தேதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ய வேண்டாம்.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ய வேண்டாம். ஒருவேளை டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்தால், அதற்கான கட்டணம் தாமாகவே பிடித்தம் செய்யப்படும். மீதி தொகையே கிடைக்கும். எனவே, ஆன்லைன் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டாம். ஆன்லைன் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு அதற்கான முழு தொகை பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அதுவரை பயணிகள் பொறுமை காக்க வேண்டும்.

ரத்து செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளை வாங்கிய பயணிகள், ரயில் நிலைய கவுன்ட்டரில்தான் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும். அதற்கான காலக்கெடுவை ரயில்வே நிா்வாகம் ஜூன் 21-ஆம் தேதி வரை ஏற்கெனவே நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.In view of Ministry of Home Affairs guidelines on the measures to be taken by Ministries/Departments of Government of India and in continuation of measures already taken for containment of COVID-19 Epidemic in the country the following steps are taken:

1.      Cancellation of all type of passenger train services, that is, all Mail/Express trains (including premium trains), passenger trains and suburban trains in Chennai region is extended upto 24:00 hours/midnight of 14th April, 2020.

2.      Freight trains will be continued to run.

3.      Booking of all types of tickets for journey period upto 24:00 hrs of 14th April, 2020 is suspended. This will be applicable to booking of reserved/unreserved tickets both at railway counters and online using IRCTC portal. Booking of unreserved tickets using UTSonMobile app will also remain suspended.

4.       All counters for booking of Rail journey tickets both reserved/unreserved travel at railway stations and outside station premises will remain closed upto 24:00 hrs/midnight of 14 April, 2020.

5.      E-ticketing facility for booking of reserved tickets for journey period after 24:00 hrs of 14th April 2020 will be available online.
புதியது பழையவை