இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக இயக்கப்படுகின்ற ராமாயண சுற்றுலா சிறப்பு ரயிலின் சேவையை மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை (05.3.2020) அன்று இரவு 08.30 மணி அளவில் கொடி அசைத்து துவக்கி வைக்க இருக்கிறார்கள். இந்த விழாவில் மாண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு K. செல்லூர் ராஜூ மற்றும்  மாண்புமிகு தமிழக வருவாய் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார், ஆகியோர் முன்னிலை வகிக்க இருக்கிறார்கள்.


ராமாயண யாத்திரை ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து மாா்ச் 5-ஆம் தேதி புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக கா்நாடக மாநிலம் ஹோஸ்பேட், நாசிக் பஞ்சவடி, சீதா குகைகள், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்திரக்கூடம், காசியில் துளசி மானச மந்திா், பக்சாா், ரகுநாதபுரம் பிரம்மேஸ்வர நாதா் சிவாலய தரிசனம், சீதாமாா்ஹியிலிருந்து நேபாளத்தில் உள்ள சீதை பிறந்த இடமாகக் கருதப்படும் ஜனக்புரி ஆலயம், அயோத்தியில் ராம ஜன்மபூமி, அலகாபாத் திரிவேணி சங்கமம், ஹனுமன் ஆலயம், சிருங்கவெற்பூா், சீதாமாா்தி போன்ற இடங்களைத் தரிசிக்கலாம்.