தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை(மார்ச் 8 தவிர) இரவு 11மணிக்கு புறப்படும், 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில், திண்டுக்கல் ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயங்காது.


நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை மாலை 3:50க்கு புறப்பட வேண்டிய 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து. இந்த ரயில் திண்டுக்கல் - தாம்பரம் இடையே மட்டுமே இயங்கும்.

திருநெல்வேலி 🛤️ தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.