பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், மார்ச் 3, 5, 6, 7 மற்றும் 10ம் தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.
www.tnrailnews.in


திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:40 புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில், மார்ச் 3, 5, 6, 7 மற்றும் 10ம் தேதிகளில் திருநெல்வேலி - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 4:05க்கு பதிலாக மாலை 6:45க்கு புறப்படும்.
www.tnrailnews.in

மேற்கொண்ட இரண்டு ரயில்களும் மார்ச் 9ம் தேதி முழுமையாக இயங்கும்.

திருநெல்வேலி 🛤️ தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.