ஹைதெராபாத் - ராமேஸ்வரம் - ஹைதெராபாத் இடையே காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை வழியாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறப்பு ரயில்.

07685 ஹைதெராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.

ஹைதராபாத்தில் இருந்து மார்ச் 6, 13, 20, 27, ஏப்ரல் 3, 10, 17, 24 மற்றும் மே 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் 00:15க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.(அதாவது சனிக்கிழமை இரவு).07686 ராமேஸ்வரம் - ஹைதெராபாத் சிறப்பு ரயில்.

ராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 8, 15, 22, 29, ஏப்ரல் 5, 12, 19, 26 மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் அதிகாலை 5மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.
தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர்(கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
https://www.tnrailnews.in/2020/03/Hyb-rmm-spl-may20.html