பொள்ளாச்சி, பழனி, மதுரை, நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு 🔄 திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் மார்ச் 28ம் தேதி வரை மாற்றம்.பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், மார்ச் 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மார்ச் 18, 22 மற்றும் 25ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. https://www.tnrailnews.in/2020/03/28_15.html
https://www.tnrailnews.in/2020/03/28_15.html

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:40 புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில், மார்ச் 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் திருநெல்வேலி - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மார்ச் 18, 22 மற்றும் 25ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் மார்ச் 18, 22 மற்றும் 25ம் தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 4:05க்கு பதிலாக மாலை 6:45க்கு புறப்படும். https://www.tnrailnews.in/2020/03/28_15.html
Recent Posts Widget
புதியது பழையவை