வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) அனைத்து ரயில்களும் ரத்து

இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற மார்ச் 22ம் தேதி அன்று பிரதமர் அறிவுறுத்தியப்படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க குறிப்பிட்ட சில ரயில்களை தவிர மற்ற அனைத்து பயணிகள் மற்றும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

1. புறநகர் ரயில்கள்:

சென்னை புறநகர் ரயில்கள் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படும்.

2. பயணிகள் ரயில்கள்:

21.03.2020 சனிக்கிழமை இரவு 22:00 மணியிலிருந்து 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை (24 மணி நேரம்) புறப்படும்  அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

3. மெயில்/ விரைவு/ இன்டர்சிட்டி ரயில்கள்:

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:00 மணியிலிருந்து இரவு 22:00 மணி வரை புறப்படும் அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொலை தூர ரயில்கள் இயங்கும் பட்சத்தில், அதில் வந்து இறங்கும் பயணிகள், ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறைகளில் தங்கும் வசதி செய்யப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளை பரிசோதனை செய்த பின்னரே செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Change in Train services on 22-03-2020 (Sunday)
With the expected fall in demand for rail travel on account of Janata Curfew
Keeping in view the fact that the demand for rail travel will be vastly reduced during the Janata Curfew i.e., 07:00 AM to 09:00 PM on 22-03-2020 (Sunday) the following changes are advised with respect to train services:
1.    Passenger Train Services:
All Passenger trains originating between midnight (i.e., 00:00 hours) of 21/22-03-2020 to 22:00 hours of 22-03-2020 will not be run.
2.    Mail/Express and Intercity Trains:
There will be large scale cancellation of long distance mail/express trains and Intercity trains originating between 04:00 hours and 22:00 hours on 22-03-2020.
3.    Suburban Train Services:

Suburban train services in Chennai region will be reduced to bare minimum only
to cater to the essential travel requirements on 22-03-2020 (Sunday)
           
          Further details will be advised tomorrow i.e, on 21-03-2020.
புதியது பழையவை