சமீபத்தில் திருவாரூர் - மயிலாடுதுறை - கடலூர் மின்மியமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை - விழுப்புரம் தடத்தில் 6 பயணிகள் ரயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை - திருவாரூர் தடத்தில் இயங்கும் 4 பயணிகள் ரயில்கள் நாளை(மார்ச் 10) முதல் மின்சார இன்ஜின் மூலம் இயங்கும் என திருச்சி கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.அதன் விவரம் பின்வருமாறு ;


  • மயிலாடுதுறையில் இருந்து காலை 6:20க்கு புறப்படும், 56871 மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில்.
  • திருவாரூரில் இருந்து காலை 8:10க்கு புறப்படும், 56872 திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்.
  • மயிலாடுதுறையில் இருந்து மாலை 6:10க்கு புறப்படும், 56879 மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில். 
  • திருவாரூரில் இருந்து இரவு 8:05க்கு புறப்படும், 56880 திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்.

மேற்கொண்ட 4 ரயில்கள் நாளை முதல் மின்சார இன்ஜின் மூலம் இயங்கும்.