நெல்லை-ஜபல்பூர்(வண்டி எண்: 01703) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் மார்ச் மாதம் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இந்த சிறப்பு ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி, திருத்தணி வழியாக செல்லும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி