Image result for pollachi railway station
இந்திய இரயில்வே துறையின் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணை கமிட்டி மாநாடு வருகிற பிரப்ரவரி மாதம் 26 -ம் தேதி முதல் 28 -ம் தேதி வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய இரயில்வேயின் அனைத்து பிராந்திய இரயில்வே அதிகாரிகளும் கலந்து கொண்டு புதிய இரயில்களுக்கான கால அட்டவனை, தற்போது உள்ள இரயில் சேவைகளின் பயனதூரம் நீட்டிப்பு, இரயில்களின் வேகம் அதிகரிப்பு, கால நேரமாற்றம், இரயில் நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்து இரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.


தென்னக இரயில்வேயால் இந்த மாநாட்டில் கலந்தாய்வு செய்யப்படக்கூடியவற்றை அதன் பொது மேலாளர் சமர்பிக்கவுள்ளார். இதில் பொள்ளாச்சி தொகுதியில் உள்ள இரயில் தேவைகளின் முக்கியத்துவத்தை அதன் பாராளுமன்ற உறுப்பினர் திரு சண்முக சுந்தரம் அவர்கள் பொது மேலாளர் அவர்களுக்கு நினைவூட்டல் கடிதம் மூலம் எடுத்துறைத்துள்ளார். 


அந்த கடிதத்தில் அகல இரயில்பாதை மாற்றத்திற்க்காக நிறுத்தப்பட்ட கோவையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு இரவுநேர விரைவு இரயில், கோவை தூத்துக்குடி, கோவை கொல்லம், மதுரை கோவை இன்டர்சிட்டி இரயில், திண்டுக்கல் கோவை பயணிகள் இரயில் மேலும் கோவை பெங்களூர் இரவு நேர புதிய விரைவு இரயில், பொள்ளாச்சி சென்னை க்கும் இடையே கோவை வழியே இரவு நேர புதிய விரைவு இரயில், மேட்டுப்பாளையம் தாம்பரம் இடையே பொள்ளாச்சி, பழனி, திருச்சி வழியே புதிய விரைவு இரயில்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், திருநெல்வேலி தாதர் இரயிலை வாரம் இருமுறையாக்கி பழனி பொள்ளாச்சி வழியே விடுவதற்கும், கொச்சுவேலி ஹூப்ளி இரயிலை கோவை வழியாக இயக்கிடவும், அமிர்தா விரைவு இரயிலை இராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், புதியதாக விடப்படவுள்ள இராமேஸ்வரம் மங்களூர் இரயிலை கார்வார் வரை நீட்டிக்கவும், பாலக்காட்டில் 3மணி ரேரத்திற்கும் அதிகமா நின்று கொண்டு இருக்கும் பாலருவி இரயிலை கோவை வரை நீட்டிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.


தற்போது கோவையில் இருந்து மதியம் புறப்பட்டு பழனி சென்று திரும்ப மதுரை செல்கின்ற இரயிலை கோவை மதுரை என்று ஒரே இரயில்லாக இயக்கிடவும், கோவை பொள்ளாச்சி, கோவை ஜபல்பூர் சிறப்பு இரயில்களை நிரந்தரமாக இயக்கிடவும், கோவையில் இருந்து புறப்படுகிற உதய் எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்களின் புறப்படும் நேரம் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கவும் கோரியுள்ளார்.