மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடி - மணியாச்சி இடையேயான இரட்டை பாதை பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
www.tnrailnews.in www.tnrailnews.in
இந்நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையம் முதல் குமாரபுரம் ரயில் நிலையம் வரை இரட்டை பாதை வீதி மீறி நடப்பதாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்காலத்தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். www.tnrailnews.in
www.tnrailnews.in
அதில், ரயில் பாதை அமைப்பதற்கு சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வகுத்துள்ளதாகவும், அந்த விதிமுறைகள் படி ரயில் பாதை அமைக்க தரமான மண் பயன்படுத்த வேண்டும் என்றும். ஆனால் திருநெல்வேலி - குமாரபுரம் தடத்தில் களிமண் பயன்படுத்தி விதி மீறப்படுவதாகவும் குற்றச்சாட்டி உள்ளார். www.tnrailnews.in
www.tnrailnews.in
மேலும் தரமான மண் பயன்படுத்த உத்தரவிடவும், அதுவரை இரட்டை பாதை பணியை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
www.tnrailnews.in
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தெற்கு ரயில்வே பதிலளிக்க உத்தரவிட்டுள்ளானர்.