சென்னையில் இருந்து மும்பை செல்லும் ரயில்கள் அதிக பயண நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அதனை குறைத்து ரயில்களை விரைவாக இயக்கிட வேண்டும் என்றும் மும்பை தமிழ் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது இந்த கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் பயண நேரத்தை ஜூலை மாதம் முதல் குறைத்து உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதில் சில ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ரயில்களின் முனையமும்(வந்து செல்லும் நிலையம்) மாற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :

* 11027(தற்போதைய எண்) - 22157(புதிய எண்)
 • தற்போதைய நேரம்
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 11:45 இரவு
  • சென்னை சென்ட்ரல் - 3:30 அதிகாலை
 • புதிய நேரம்
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 10:55 இரவு
  • சென்னை எழும்பூர் - 9:45 இரவு
 • ஜூலை 1ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பதிலாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும்.
 • 22 பெட்டிகள் கொண்டு இயக்கம்.
*****
* 11028(தற்போதைய எண்) - 22158(புதிய எண்)
 • தற்போதைய நேரம்
  • சென்னை சென்ட்ரல் - 11:55 இரவு
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 3:45 அதிகாலை
 • புதிய நேரம்
  • சென்னை எழும்பூர் - 6:30 அதிகாலை
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 4:45 அதிகாலை
 • ஜூலை 2ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பதிலாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும்.
 • 22 பெட்டிகள் கொண்டு இயக்கம்.
*****
11041(தற்போதைய எண்) - 22159(புதிய எண்)
 • தற்போதைய நேரம்
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 2:00 பிற்பகல்
  • சென்னை சென்ட்ரல் - 4:20 மாலை
 • புதிய நேரம்
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 12:45 பகல்
  • சென்னை சென்ட்ரல் - 10:50 காலை
 • 20 பெட்டிகள் கொண்டு இயக்கம்.
 • ஜூலை 1ம் தேதி முதல் மேற்கொண்ட மாற்றம்.
*****
* 11042(தற்போதைய எண்) - 22160(புதிய எண்)
 • தற்போதைய நேரம்
  • சென்னை சென்ட்ரல் - 12:20 பகல்
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 1:45 பகல் 
 • புதிய நேரம்
  • சென்னை சென்ட்ரல் - 1:20 காலை
  • மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - 12:45 பகல்
 • 20 பெட்டிகள் கொண்டு இயக்கம்.
 • ஜூலை 2ம் தேதி முதல் மேற்கொண்ட மாற்றம்.
*****
* 12163(தற்போதைய எண்) - 12163(புதிய எண்)
 • தற்போதைய நேரம்
  • மும்பை தாதர் - 8:30 இரவு
  • சென்னை எழும்பூர் - 7:45 இரவு 
 • புதிய நேரம்
  • மும்பை லோகமணிய திலக் - 6:45மாலை
  • சென்னை சென்ட்ரல் - 4:20 மாலை
 • 24 பெட்டிகள் கொண்டு இயக்கம்.
 • ஜூலை 1ம் தேதி முதல் மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கு பதிலாக மும்பை லோகமணிய திலக் முனையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்
 • சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
*****
* 12164(தற்போதைய எண்) - 12164(புதிய எண்)
 • தற்போதைய நேரம்
  • சென்னை எழும்பூர் - 6:45 காலை
  • மும்பை தாதர் - 6:00 காலை 
 • புதிய நேரம்
  • சென்னை சென்ட்ரல் - 6:15 மாலை
  • மும்பை லோகமணிய திலக் - 4:00 மாலை
 • 24 பெட்டிகள் கொண்டு இயக்கம்.
 • ஜூலை 2ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
 • மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கு பதிலாக மும்பை லோகமணிய திலக் முனையம் ரயில் நிலையத்திற்கு சென்றடையும்
*****

மேற்கொண்டதகவல்களை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு கீழே உள்ள சமூக வலைதள பொத்தான்களை உபயோகிக்கவும். நன்றி