விழுப்புரம், விருத்தாசலம், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக இயக்கப்படும் புதுச்சேரி 🔄 யஷ்வந்த்புர் வாராந்திர விரைவு ரயில் பெட்டிகள் அதிநவீன எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்படவுள்ளது.

இந்திய ரயில்வே, ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.எச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, 16573 யஷ்வந்த்புர் - புதுச்சேரி விரைவு ரயில், மார்ச் 13ம் தேதியும், 16574 புதுச்சேரி - யஷ்வந்த்புர் விரைவு ரயில் மார்ச் 14ம் தேதி முதல் எல்.எச்.பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில்களில் பயோடாய்லெட்கள், மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்பிரிங் பொறுத்தப்பட்ட போகிகள், விபத்துகளின்போது ஒரு ரயில்பெட்டி மற்ற ரயில்பெட்டியின் மீது மோதி பெரும் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைப்பு, தீப்பிடிக்காத பிட்டிங்குகள் மற்றும் ரயில்களின் உள்ளே சப்தம் கேட்பதைத் தவிர்க்கும் வகையில் இன்சுலேஷன் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் வசதிக்காக பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பிவிசி தரைவிரிப்புகள், ரயில்பெட்டிகள் இடையே தானியங்கிக் கதவுகள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

16573 யஷ்வந்த்புர் - புதுச்சேரி விரைவு ரயில்

16574 புதுச்சேரி - யஷ்வந்த்புர் விரைவு ரயில்
Recent Posts Widget