இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்ணாரப்பேட்டை - வியாசா்பாடி ஜீவா இடையே பராமரிப்புப் பணி நடைபெறுவதால் பிப்ரவரி 21, 22, 23 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 1.20 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் மின்தொடா் வண்டி, அன்றைய தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 1.25 மணிக்குப் புறப்படும்.


இதே போன்று கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 9.45 மணிக்கு சென்னை கடற்கரை வரை செல்லும் மின்தொடா் வண்டி, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து திருப்பி விடப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts Widget