Image result for roll on roll off konkan

நாட்டின் வட மாநிலங்களில் இருந்து பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள், சரக்கு ரயில்களில், தென் மாவட்டங்களுக்கு வருகின்றது. இங்கிருந்து, சிமென்ட், அரிசி, ஜவுளிகள் உள்பட பல பொருட்கள் வட மாநிலங்களுக்கு ரயில்களில் செல்கின்றன. அதே போல தமிழகத்தில் பெரும்பாலும், சரக்கு லாரிகள் மூலம், இவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், லாரிகளில் ரோடு வழியாக செல்வதால் தாமதம், விபத்துகள் ஏற்படுகின்றன.

Image result for roll on roll off konkan

இந்த சூழ்நிலையில் சரக்குகளை லாரிகளில் ஏற்றி, லாரிகளை ரயில்களில் ஏற்றி மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று இறக்கும், 'ரோல் ஆன் ரோல் ஆப்' சேவையை, கொங்கன் ரயில்வே செயல்படுத்தி வருகிறது. அதன்படி மும்பையில் இருந்து, 145 கி.மீ.,யில் உள்ள கோலட், 417 கி.மீ.,யில் உள்ள வெர்னா, கோலட் மற்றும் சூரத்கல் இடையே, 721 கி.மீ.,க்கு இச்சேவை நடக்கிறது. கோலட்- சூரத்கல் இடையே சாலை வழியாக, லாரிகள் செல்ல, 40 மணி நேரம் ஆகிறது. ஆனால், 'ரோரோ' சேவை மூலம், 22 மணி நேரத்தில் சென்று விடலாம். மேலும், 15 டன் எடை ஏற்றப்பட்ட லாரியை கோலட் - சூரத்கல் இடையே கொண்டு செல்ல, 8,600 ரூபாய் மட்டுமே செலவாகும். 15 டன்னுக்கு மேல் ஒவ்வொரு டன்னுக்கும், 350 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரயில்களில் லாரிகளை ஏற்றி இறக்க, 15 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. இதனால், இச்சேவை வரவேற்பை பெற்றிருக்கிறது.

Image result for roll on roll off konkan

இந்நிலையில் இச்சேவையை முதல் முறையாக, மதுரை கோட்டத்தில் துவக்க வேண்டும் என தொழில், வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக மதுரை - சென்னை இடையே இந்த திட்டம் அமலாக உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில், 50 லாரிகள், சாலை வழியை தவிர்த்து, ரயில் மூலம் செல்வதால், கார்பன் புகை வெளியேறுவதும் வெகுவாக குறையும்.

இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் கூறுகையில் "இது, சுற்றுச்சூழலுக்கு உன்னதமான திட்டம். லாரிகளில், டிரைவர், கிளீனர் உடன் செல்லலாம். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் நெரிசலை, பெரிய அளவில் தவிர்க்க முடியும். விபத்துகளுக்கு வாய்ப்புகள் குறைவு. ஒரு ரயிலில், 50 லாரிகள் வரை ஏற்றி, இறக்க வாய்ப்புள்ளதால், கணிசமான அளவு சரக்குகளை கையாள முடியும். இச்சேவையை துவக்க வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினார். Recent Posts Widget