சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் சில நாட்களில் ‘சுகர்பாக்ஸ்’ என்ற செயலி மூலம் ரயிலுக்குள்ளான பொழுதுபோக்கு அமைப்பை உருவாக்கவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் "சுகர்பாக்ஸ்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு காணொளிகளை இலவசமாகப் பார்க்கலாம். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகியவை உட்பட்ட மொழிகளில் பயணிகள் தொலைக்காட்சித் தொடர்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின் போதும் பார்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு பின்னர் தேவைப்படும் நேரங்களில் பார்க்கலாம்.

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "திரைப்படம் ஒன்றை டவுன் லோடு செய்ய ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான். இந்த ஆப் இத்தகைய அதிவேக டவுன்லோடு வசதி கொண்டத்கும். பயணத்தின் போது பயணிகளை மகிழ்விக்கவும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு" என்று அவர் தெரிவித்தார்.

இந்த வசதி இந்த வார இறுதி முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recent Posts Widget