நாடு முழுவதும் தேஜஸ் ரயில்களை இயக்குவத்தில் ரயில்வே துறை ஆர்வம் காட்டி வருகின்றது. அதே சமயம் சில ரயில்களை பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி மூலமும் இயக்கி வருகிறது.
www.tnrailnews.in
தமிழகத்தில் சென்னை - எழும்பூர் இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தேஜஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
www.tnrailnews.in
மங்களூர் 🔄 கோயம்புத்தூர் தேஜஸ் ரயில் அட்டவணை
அதன்படி காலை 6 மணிக்கு மங்களூரில் புறப்படும் ரயில், பகல் 12:10க்கு கோயம்புத்தூர் வந்து சேரும். மறுமார்க்கத்தில் கோவையில் பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, இரவு 8:40க்கு மங்களூர் சென்றடையும்.

இது தொடர்பாக 2020ம் ஆண்டு அட்டவணை கமிட்டிக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
www.tnrailnews.in
இதற்கு வாரியம் அனுமதி அளித்ததும், இந்த ரயிலின் கட்டண விவரங்கள் மற்றும் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேஜஸ் ரயில் சிறப்பம்சங்கள்.


ஒவ்வொரு இருக்கையின் பிற்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தொியாத சிற்றுண்டி மேசைகள் உள்ளன.


மேலும், செல்போன் சாா்ஜா் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன. உயா் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பயணிகளும் பயணிக்கலாம்.