தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் சுஜித் ஸ்வாமி காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் ரத்து மூலம் ரயில்வே வருவாய் ஈட்டிய விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு ரயில்வே தகவல் மையம் அளித்துள்ள பதில் பின்வருமாறு ;

* 2017 ஜனவரி 1 - 2020 ஜனவரி 31 இடையிலான காலகட்டத்தில், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் ரத்து மூலம் ₹ 4335 கோடி வருவாய் எட்டியுள்ளது.

* 2017 ஜனவரி 1 - 2020 ஜனவரி 31 இடையிலான காலகட்டத்தில், உறுதியான டிக்கெட் ரத்து மூலம் ₹ 4684 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

* 2017 ஜனவரி 1 - 2020 ஜனவரி 31 இடையிலான காலகட்டத்தில், 145 கோடி பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அதில் சுமார் 74 கோடி பயணிகள் முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து ரயில் ஆர்வலர்கள் கூறுகையில், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் காத்திருப்போர் பட்டியல் சில ரயில்களில் 400க்கும் அதிகமாக உள்ளதாகவும், ஆனால் அந்த ரயில்கள் வெறும் 20-30 டிக்கெட்டுகள் மட்டுமே உறுதி ஆவதாகவும் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் இதர டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால் அவை தானாக ரத்து ஆவதாகவும், அதற்கு ரயில்வே துறை சிறிய தொகையை பிடித்தம் செய்து மீதி தொகையை வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் ரயில்கள் இயக்காமலே வருவாய் ஈட்டி வருவதாகவும் குற்றமச்சாட்டுகின்றனர்.