தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை - பழனி - மதுரை இடையே பிப்ரவரி 8ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் இயக்கவுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

மதுரை - பழனி பயணிகள் சிறப்பு ரயில்.

மதுரைக்கு பிப்ரவரி 8ம் தேதி காலை வரும் புணலூர் - மதுரை பயணிகள் ரயில், மதுரையில் இருந்து காலை 8:45க்கு பழனி சிறப்பு ரயில் ஆக புறப்பட்டு முற்பகல் 11:15க்கு பழனி வந்து சேரும்.

பழனி - மதுரை பயணிகள் சிறப்பு ரயில்.

பழனியில் இருந்து பிப்ரவரி 8ம் தேதி இரவு 8மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10;15க்கு மதுரை வந்து மதுரை - புணலூர் பயணிகள் ரயில் ஆக திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக புணலூர் வரை செல்லும்.

மேற்கொண்ட ரயிலுக்கான அட்டவணை பின்வருமாறு:
மதுரை - பழனி
நிறுத்தம்
வருகை
புறப்பாடு
மதுரை
--
8:45
சோழவந்தான்
9:08
9:10
கொடைக்கானல் ரோடு
9:25
9:27
திண்டுக்கல்
9:50
9:55
ஓட்டன்சத்திரம்
10:25
10:27
பழனி
11:15
--
பழனி - மதுரை
நிறுத்தம்
வருகை
புறப்பாடு
பழனி
---
20:00
ஓட்டன்சத்திரம்
20:24
20:25
திண்டுக்கல்
20:55
21:00
கொடைக்கானல் ரோடு
21:18
21:20
சோழவந்தான்
21:33
21:35
மதுரை
22:15