ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களை பிடிக்க பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவ்வப்போது சோதனை நடத்துவார்கள்.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் இது போன்ற சோதனைகள் மேற்கொள்ள மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின் அவர்களின் உத்தரவின்பேரில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா, கோட்ட வர்த்தக மேலாளர் எம். பாரத்குமார்உதவி வர்த்தக மேலாளர் நிறைமதி எழிலன் பிள்ளைக்கனி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டன.

இந்த சோதனைகளில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த 13,186 நபர்கள் பிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூபாய் 75.97 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை  காட்டிலும் 90 சதவீதம் அதிகமாகும். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும்  65 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிதி ஆண்டு ஜனவரி மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 89,917 நபர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூபாய் 5.63 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டு ஜனவரி மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதத் தொகையாக ரூபாய் 3.77 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாதிரி புகைப்படம்

75.97 lakhs realized as FINE during the Month of January through ticket checking dirve

            As per the directives of Shri V.R. Lenin, Divisional Railway Manager, and the direct supervision of Shri V. Prasanna, Senior Divisional Commercial Manager, Shri M. Bharath Kumar, Divisional Commercial Manager, Shri G. Niraimathi E. Pillaikani, Assistant Commercial Manager, special ticket checking drive was conducted during the Month of January 2020.

An amount to the tune of Rs.75.97 lakhs was collected as fine which is more than 90% compared to last year in the same period.   A total of 13186 cases has been booked which is 65%  more than the corresponding period.

During this fiscal an amount of Rs.5.63 crore was collected upto January 2020  which is 49% more than last year.  89917 cases booked upto January 2020 which is 43,10% more than last year.