சமீபத்தில் கடலூர் ➡️ மயிலாடுதுறை ➡️ திருவாரூர் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தடத்தை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர், ரயில்களை மின்சார இன்ஜின் மூலம் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் 1ம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை தடத்தில் இயங்கும் 6 பயணிகள் ரயில்களை மின்சார இன்ஜின் மூலம் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

1. விழுப்புரத்தில் காலை 5:55க்கு புறப்படும், 56873 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்.

2. மயிலாடுதுறையில் இருந்து காலை 5:40க்கு புறப்படும், 56874 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்.

3. விழுப்புரத்தில் பிற்பகல் 2:30க்கு புறப்படும், 56875 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்.

4. மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3:45க்கு புறப்படும், 56876 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்.

5. விழுப்புரத்தில் மாலை 5:40க்கு புறப்படும், 56877 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்.

6. மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:45க்கு புறப்படும், 56878 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்.

மேலும் விழுப்புரத்தில் இருந்து மாலை 6:55க்கு புறப்படும், 56886 காட்பாடி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4:55க்கு புறப்படும், 56881 விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகியவை மார்ச் 1ம் தேதி முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Recent Posts Widget