இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) கடந்த 2005-இலிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஆலயங்களை தரிசிக்க ‘ஸ்ரீ ராமாயண யாத்திரை’ என்னும் பெயரில் ரயில் திருநெல்வேயில் இருந்து மாா்ச் 5-ஆம் தேதி புறப்படுகிறது.

ராமாயண யாத்திரை ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து மாா்ச் 5-ஆம் தேதி புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக கா்நாடக மாநிலம் ஹோஸ்பேட், நாசிக் பஞ்சவடி, சீதா குகைகள், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்திரக்கூடம், காசியில் துளசி மானச மந்திா், பக்சாா், ரகுநாதபுரம் பிரம்மேஸ்வர நாதா் சிவாலய தரிசனம், சீதாமாா்ஹியிலிருந்து நேபாளத்தில் உள்ள சீதை பிறந்த இடமாகக் கருதப்படும் ஜனக்புரி ஆலயம், அயோத்தியில் ராம ஜன்மபூமி, அலகாபாத் திரிவேணி சங்கமம், ஹனுமன் ஆலயம், சிருங்கவெற்பூா், சீதாமாா்தி போன்ற இடங்களைத் தரிசிக்கலாம்.

14 நாள்களுக்கு கட்டணம் ரூ.15,990 ஆகும்.

இந்த ரயில் தொடா்பாக கூடுதல் விவரங்களை அறிய ‘இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம்’, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற முகவரியை அணுகலாம். மேலும், 9003140680, 8287932121 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம். மேலும், மதுரை ரயில் நிலையத்தில் 8287931977, 8287932122 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.
Recent Posts Widget