Image result for private tejas train

நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக, 3,000 - 4,000 ரயில்கள் தேவை என ரயில்வே துறை மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 100 வழித்தடங்களில், தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில் இயக்க அனுமதி அளிக்க, இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக, 150 ரயில்களை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. 

இதன் மூலம், ரயில் போக்குவரத்தில் தனியார் முதலீடு அதிகரிக்கும் என்பதுடன், அரசின் நிதிச் சுமையும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அரசின் கொள்கைகளை வகுக்கும், 'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் "தனியார் மூலம் ரயில்களை இயக்க, 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே தலைவர் கூறுகையில் "ரயில் போக்குவரத்தில், தனியார் நிறுவனங்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை, இந்திய ரயில்வே பார்த்துக் கொள்ளும்" என கூறினார்.

Image result for flexi fare train

தனியார் ரயில்கள் குறித்த ஒப்பந்த அறிவிக்கையில் இடம் பெறும் சில முக்கிய விதிமுறைகள்.

  • தனியார் நிறுவனங்கள், ரயில் தண்டவாளத்தை பயன்படுத்த, 1 கிலோ மீட்டருக்கு, 686 ரூபாய் கட்டணம். 
  • அந்நிறுவனங்கள் ஈட்டும் வருவாயில், குறிப்பிட்ட சதவீதத்தை, இந்திய ரயில்வே உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • சந்தை நிலவரத்தை பொறுத்து, ரயில் போக்குவரத்து கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 
  • தனியார் ரயில் போக்குவரத்தில், பயணியருக்கு கூடுதல் வசதிகள் வழங்க திட்டமிட்டுள்ளது.

 Image result for private tejas train
சாதனை படைக்கும் தற்போதைய தனியார் ரயில்கள்.

இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவாக, செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.சி., தற்போது டில்லி - லக்னோ மற்றும் ஆமதாபாத் -மும்பை இடையே தனியார் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த இரண்டு ரயில்களும் குறுகிய காலத்தில் பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற, 20ம் தேதி, வாரணாசி - இந்துார் இடையே மூன்றாவது தனியார் ரயில் சேவையை துவக்க ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்துள்ளது. Recent Posts Widget