Image result for cholan express

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - எழும்பூர் 'சோழன்', காரைக்குடி - திருச்சி மற்றும் திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில்களின் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.


  • திருச்சியில் இருந்து காலை 10மணிக்கு புறப்படும், 16796 திருச்சி - சென்னை எழும்பூர் 'சோழன்' விரைவு ரயில், பிப்ரவரி 29ம் தேதி வரை 35 நிமிடங்கள் தாமதமாக காலை 10:35க்கு திருச்சியில் இருந்து புறப்படும்.
  • காரைக்குடியில் இருந்து காலை 9:50க்கு புறப்படும், 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் பிப்ரவரி 29ம் தேதி வரை(ஞாயிறு தவிர) 60 நிமிடங்கள் தாமதமாக காலை 10:50க்கு காரைக்குடியில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரயில் திருச்சிக்கு 70 நிமிடங்கள் தாமதமாக பகல் 1 மணிக்கு திருச்சி வந்து சேரும்.
  • திருச்சியில் இருந்து காலை 10:05க்கு புறப்படும், 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், பிப்ரவரி 29ம் தேதி வரை(ஞாயிறு தவிர) 25 நிமிடங்கள் தாமதமாக காலை 10:50க்கு திருச்சியில் இருந்து புறப்படும்.


மேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.