Blog Entry#: 4524403-0
MDU/Madurai Junction
MDU Station Board

Credits - PRANAV TS

மதுரை - பழனி
மதுரையில் இருந்து காலை 7:45க்கு புறப்படும், 56624 மதுரை - பழனி பயணிகள் ரயில், பிப்ரவரி 29ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதே சாயம் மதுரையில் இருந்து காலை 6:30க்கு பழனிக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயில் பழனிக்கு காலை 10மணிக்கு சென்றடையும். இடையில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும்.

மதுரை - செங்கோட்டை
மதுரையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும், 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், பிப்ரவரி 25ம் தேதி வரை(வியாழக்கிழமை தவிர) மதுரை - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர் - செங்கோட்டை இடையே வழக்கம் போல இயங்கும்.

செங்கோட்டை - மதுரை
செங்கோட்டையில் இருந்து முற்பகல் 11:50க்கு புறப்படும், 56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், பிப்ரவரி 25ம் தேதி வரை(வியாழக்கிழமை தவிர) விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயங்கும்.