Image result for pamban bridge

ரயில் பாதை பராமரிப்பு பணிகள்  காரணமாக 13.02.2020 முதல் 23.02.2020 வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  கீழ்க்கண்ட ரயில்கள் வழக்கம்போல இயங்கும்.

மதுரையிலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56721 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில்,  ராமேஸ்வரத்திலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56722 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் மற்றும் வண்டி எண் 56829 /56830 திருச்சி-ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் வழக்கம் போல ராமேஸ்வரம் வரை இயக்கப்படும்.

இருந்தபோதிலும் பாம்பன் பால பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

  • மதுரையிலிருந்து காலை 6:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56723 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், பிப்ரவரி 13ம் தேதி பிப்ரவரி 23ம் தேதி வரை மண்டபம் - ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • ராமேஸ்வரத்திலிருந்து முற்பகல் 11:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56722 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில், 13.02.2020 முதல் 23.02.2020 வரை ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.