திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை06072 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து ஜனவரி 2, 9, 23, 30 மற்றும் பிப்ரவரி 6ம் தேதிகளில் இரவு 9மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:30க்கு தாம்பரம் வந்து சேரும்.

06071 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் ஜனவரி 3, 17, 24, 31 மற்றும் பிப்ரவரி 7ம் தேதிகளில் இரவு 7:15மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கிழக்கடையம், பாவூர் சாத்திரம், தென்காசி, பம்பா கோவில் சந்தை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


புதியது பழையவை