தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க துணை சபாநாயகர் கோரிக்கை

தைப்பூச விழாவையொட்டி குவியும் பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்விழாவையொட்டி தென் மாவட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் போக்குவரத்து வசதிக்காக ஆண்டுதோறும் அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் சேவையை பொறுத்தமட்டில் பஸ்சைவிட கட்டணம் குறைவே. ஆனால் ரயில்கள் கூடுதலாக இந்த காலங்களில் இயக்கப்படுவதில்லை.

இந்நிலையில் தைப்பூச திருவிழாவிற்கு கூடுதல் ரயில்கள் இயக்க தமிழக சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன் அவர்கள் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கோயம்புத்தூர் - பழனி, பாலக்காடு - பழனி மற்றும் காரைக்கால் - கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் இடையே தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கவும், கோயம்புத்தூர் - திருநெல்வேலி இடையே பகல் நேர இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூடிய ரயில் நிலையங்களை திறக்க கோரிக்கை.

கோவை - பொள்ளாச்சி இடையே செட்டிப்பாளையம், கோவில்பாளையம், தாமறைக்குளம் மற்றும் ஆச்சிப்பட்டி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கவும், பொள்ளாச்சி - பழனி இடையே திப்பம்பட்டியில் ரயில் நிலையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடுதல் நிறுதங்கள்.

வட கோவை மற்றும் போத்தனுர் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே சமயம், தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் கோவை - பொள்ளாச்சி தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க பரிசீலனை செய்யவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு :
(ஜன 21 தெற்கு ரயில்வே வழங்கியது)

1. கேள்வி - கோவை - காரைக்கால் இடையே பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்க திட்டம் உள்ளதா ?
பதில் - இன்றைய தேதியில் திட்டம் எதுவும் இல்லை.

2. கோவை - பெங்களூர் தினசரி புதிய ரயிலின் தற்போதைய நிலை என்ன ?
பதில் - தற்போது கோவை - வெங்களூர் இடையே இரட்டை அடுக்கு உதய், மும்பை - கோவை மற்றும் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு கோவை வழியாக ரயில்கள் உள்ளது. ஓசூர் - தர்மபுரி தடம் இரட்டை பாதையாக மாற்றியபிறகு கூடுதல் ரயில்கள் குறித்து பரிந்துரை செய்யப்படும்.

3. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க திட்டம் உள்ளதா ?
பதில் - இன்றைய தேதியில் திட்டம் எதுவும் இல்லை.

4. கோவை - ராமேஸ்வரம் இடையே ரயில்கள் இயக்க திட்டம் உள்ளதா ?
பதில் - இன்றைய தேதியில் திட்டம் எதுவும் இல்லை.

5. கோவை - ராமேஸ்வரம் இடையே திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும் வாராந்திர ரயிலின் சேவையை அதிகரிக்க திட்டம் உள்ளதா ?
பதில் - இன்றைய தேதியில் திட்டம் எதுவும் இல்லை.


புதியது பழையவை