திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ரயில் நிலையத்தில் பயணிகள் வந்து செல்வதற்கு எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் திண்டுக்கல் - சேலம் இடையே உள்ள ரயில் நிலையங்கள் ரயில்வே பாதைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள திண்டுக்கல் வந்ததாகவும், இங்கிருந்து ஆய்வுப் பணிகளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் செல்லக்கூடிய தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மதுரை - நாகர்கோவில் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் வருகின்ற  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்றும். திண்டுக்கல், பழனி வழியாக கோவைக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.