ரயில்களின் நிலை குறித்த தகவலை துல்லியமாக வழங்க இஸ்ரோவுடன் இணைந்தது இந்தியன் ரயில்வேரயில்கள் ஒரு நிலையத்தை கடந்தவுடன் எந்த இடத்தில் செல்கிறது என்பதை கண்டறிவது இந்திய ரயில்வே துறைக்கு சவாலாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் இதனை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே துறையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் இணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி Real Time Train Information System - RTIS என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த RTIS தொழில்நுட்பத்தை மின்சார இன்ஜின்களில் பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு ரயில் நிலையத்திற்கு வரும் ரயில், ரயில் புறப்படும் நேரம், ரயில் பயணிக்கும் வேகம், தற்போதைய நிலை மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இடையிலான தூரம் ஆகியவற்றை பெற முடியும்.

முதற்கட்டமாக ரயில்வே துறையினர் இதனை 2700 மின்சார இன்ஜின்களில் பொருத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் ரயில்களின் தமதங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.