மும்பை - ராமேஸ்வரம் இடையே 'டெம்பிள்'(கோவில்) புதிய விரைவு ரயில் இயக்கவும், தாதர் - எழும்பூர் மற்றும் எழும்பூர் - சேலம் ரயிலை இணைத்து இயக்கவும் ராஜா உடையார் கோரிக்கை

ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் & குழு உறுப்பினர்கள் மும்பை வருகையின் போது மும்பை மற்றும் தென்னிந்திய மக்களுக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என தலைவர் கிருஷ்ணதாஸிடம் ராஜா உடையார் கோரிக்கை வைத்தார் .


ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் ( Chairman of Passenger Amenities committee) P.K.கிருஷ்ணதாஸ் மற்றும் உறுப்பினர்களான தமிழகத்தை சேர்ந்த திரு. சி.ரவிந்திரன். ஆந்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த திருமதி. காகு விஜியலட்சுமி, தெலுங்கானா மாநிலத்தின் ஜி.பி.ரெட்டி, மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டாக்டர் ராஜேந்திர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருந்து திரு.ஹிமான்றி ஆகியோர் மும்பை வந்தார்கள், சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து வடலா மற்றும் குர்லா போன்ற பகுதிகளுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்தனர். அச்சமயம் ரயிலில் பயணம் செய்த பயணிகளையும் மற்றும் நடைமேடையில் உள்ள ரயில் பயணிகளையும் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் மத்திய ரயில்வே துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் திரு.ராஜா உடையார், திரு.மது கொட்டியன், திரு. ஆனந்த் சிந்தே, மற்றும் தேசிய ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு. சுபாஷ் குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினராகிய ராஜா உடையார் ரயில்வே பயணிகள் வசதிகள் குழு தலைவர் P.K.கிருஷ்ணதாஸ் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள கும்பகோணம், தாஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் பல பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள் சங்கம் பொருப்பாளர்கள் மற்றும் ரயில் பயணிகள் ராஜா உடையாரிடம் தொடர்பு கொண்டு கேட்டுகொண்டதினால் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ரேணிகுண்டா, சோலாப்பூர், பூனே வழியாக மும்பைக்கு வரை புதியதாக ரயில் இயக்க வேண்டும் என்றும், மும்பையில் உள்ள மக்கள் மற்றும் ஆண்மிக யாத்திரைகள் செல்கின்ற வர்களுக்கு வசதியாக இருக்கும் இந்த ரயிலுக்கு டெம்பிள் எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மும்பை தாதர் – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் (எண் 12163-12164), சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரயில் (எண் 22153-22154). மேற்படி இரண்டு எண் உள்ள வண்டி எண்ணை ஓரே எண் ஆக்கவேண்டும் என்றும், தாதர் – சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என ஓரே பெயர் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் புதியதாக ஷீரடி சாய் நகர் – ராமேஸ்வரம் இடையே மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக மற்றொரு ஓர் புதிய ரயில் இயக்க வேண்டும் என்றும் மேற்படி ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் மேற்படி கோரிக்கையை ராஜா உடையார் அவர்கள் நேரடியாக ரயில் பயணிகளின் குறைகளை விபரமாக எடுத்து கூறியதுடன் எழுத்து மூலமாகவும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தார்.

மேற்படி மனுக்கள் மற்றும் ராஜா உடையார் எடுத்துரைத்த அனைத்து கோரிக்கையும் பொறுமையாக கேட்டுக் கொண்டதோடு வரும் 24.01.2020 தில்லியில் நடக்கவிருக்கும் ரயில்வே வாரிய கூட்டத்தில் பேசி மேற்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்துள்ளதாக மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் பிரிவின் மும்பை மாநகர தலைவருமான ராஜா உடையார் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை