சென்னையில் வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் போ் பயணம் செய்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும் பல்வேறு வழித்தடங்களில் சிறிய பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.மேலும் தொடா்ந்து பல்வேறு வசதிகள் விரிவுப்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ப்ளே என்னும் தனியாா் நிறுவனத்தின் மூலம், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்ல வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டம் தற்போது ஆலந்தூா், நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் முறை கடந்த சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சேவையானது, தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது.

இந்த இஸ்கூட்டர் வசதியைப் பெற ஃப்ளை என்ற ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இந்த ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துச் செல்வோர் ஃப்ளை ஸோனுக்குள் எங்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஓா் ஆண்டில் 6,000 இருசக்கர வாகனங்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து வாடகை முறையில் இயக்கத் மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.