திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே பிப்ரவரி மாதத்தில் தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்.
06036 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து பிப்ரவரி 13, 20 மற்றும் பிப்ரவரி 27ம் தேதிகளில் மாலை 5:45மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20க்கு தாம்பரம் வந்து சேரும்.

06035 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் பிப்ரவரி 14, 21 மற்றும் பிப்ரவரி 28ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கிழக்கடையம், பாவூர் சாத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், பம்பா கோவில் சந்தை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.