3,553 தொழில் பழகுணர்(அப்ரென்டிஸ்ஷிப்) பணி : இந்திய ரயில்வே துறையின் புதிய அறிவிப்புஇந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் 3,553 அப்ரென்டிஸ்ஷிப் (தொழில் பழகுநர்) பணிக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது.  இதற்கான விண்ணப்ப இணைப்பு நாளை காலை 11 மணி முதல் பிப்ரவரி 6ம் தேதி மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ போன்றவைகளின் மூலம்  சராசரி ) மெரிட் லிஸ்ட் உருவாக்கப்படுகிறது. இந்த  மெரிட் லிஸ்டில் தயாரிப்பில்  10/ஐடிஐ என இரண்டிற்கும் சமமான  வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.   இந்த பட்டியலின் அடிப்படையில் மூலம் தேர்வர்கள் அப்ரென்டிஸ்ஷிப் பணிக்கு தேர்வு  செய்யப்படுகிறார்கள்.
மெரிட் லிஸ்ட் அடுத்த மாதம் பிப்ரவரி 13ம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆவண சரிபார்ப்பு பிப்ரவரி 28ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2020 ஏப்ரல் 1 முதல் ஒரு வருடம் பயிற்சி பெறுவார்கள்.

தகுதி
வயது: விண்ணப்பதாரர் குறைந்தது 15 வயதுடையவராக இருக்க வேண்டும். உயர் வயது வரம்பு 24 வயதாகும். பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு , உயர் வயது வரம்பு  தளர்த்தப்படுகிறது.
கல்வி: விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 (அ) 12 ஆம் வகுப்பு  முடித்திருக்க  வேண்டும். என்சிவிடி (அ) எஸ்சிவிடி இணைக்கப்பட்ட ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : இந்த ஒரு வருடத்திற்கு, தகுந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் .  ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி (சி.சி.ஏ.ஏ) மற்றும்
தேசிய பயிற்சி சான்றிதழ் (என்ஏசி) வைத்திருப்பவர்களுக்கு காலியிடங்களில்  20% முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ .18,000 – ரூ .56,900 வரம்பில் சம்பளம் கிடைக்கும்.
கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ .100 ஆகும். எஸ்சி, எஸ்டி, பி.டபிள்யூ.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

புதியது பழையவை