மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஜனவரி 30ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம். அதன் விவரம் பின்வருமாறு : பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

1. 56824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், ஜனவரி 16ம் தேதி வரை கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி - கும்பகோணம் இடையே வழக்கம் போல இயங்கும்.

2. 56821/56822 மயிலாடுதுறை - திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், ஜனவரி 16ம் தேதி வரை மயிலாடுதுறை - கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே ரத்து. இந்த ரயில் கும்பகோணம் - திருநெல்வேலி - கும்பகோணம் இடையே மட்டும் இயங்கும்.

3. 56824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், ஜனவரி 17ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. 

4. 56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில் ஜனவரி 17ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையே ரத்து. இந்த ரயில் தஞ்சாவூர் - நெல்லை இடையே மட்டும் இயங்கும்.

முழுமையாக ரத்து.

1. 16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில், ஜனவரி 17ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் திருச்சியில் இருந்து பகல் 12:50க்கு மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் இயக்கம். இந்த ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 4:15க்கு சென்றடையும்.

மேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

LINE BLOCK - CHANGE IN THE PATTERN OF TRAIN SERVICES 

Due to Line block for maintenance of Tracks in Mayiladuthurai – Kumbakonam – Thanjavur sections of Tiruchchirappalli Division following will be changes in train services .

Trains Partially Cancelled1. T.No.56824 Tiruchchirappalli – Mayiladuthurai Passenger is partially cancelled between   Mayiladuthurai  - Kumbakonam up to 16.01.2020.

2. T.No.56821 / 56822 Mayiladuthurai – Tirunelveli - Mayiladuthurai Passenger is partially cancelled between   Mayiladuthurai - Kumbakonam  up to 16.01.2020.

3. T.No.56824 Tiruchchirappalli – Mayiladuthurai Passenger is partially cancelled between  Thanjavur - Kumbakonam from 17.01.2020 to 30.01.2020.

4. T.No.56821 Mayiladuthurai - Tirunelveli Passenger is partially cancelled between   Mayiladuthurai – Thanjavur  from 17.01.2020 to 30.01.2020.


Train Cancelled and Running of Special Train

1. T.No.16234 Tiruchchirappalli – Mayiladuthurai Express is fully cancelled up to 14.01.2020.
2. T.No. 06030 Tiruchchirappalli - Mayiladuthurai One–way Unreserved Express special train will run up to 14.01.2020. The special train will leave Tiruchchirappalli at 12.50 hrs. and reach Mayiladuthurai at 16.15 hrs. the same  day.