வில்லிவாக்கம் - பேசின்பாலம் சந்திப்பு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் அமைந்துள்ள, வில்லிவாக்கம் - பேசின்பாலம் சந்திப்பு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய  தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9:45க்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் மின்தொடர் ரயில், ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் கொருக்குப்பேட்டை வழியாக சென்னை மூர் மார்க்கெட் ரயில் சென்றடையும். இந்த ரயில் கடற்கரை செல்லாது.

  • சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1:20க்கு புறப்பட வேண்டிய அரக்கோணம் புறநகர் மின்தொடர் ரயில், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் சென்னை மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

புதியது பழையவை