கோயம்புத்தூர் 🔄 சென்னை சென்ட்ரல் இடையே ஜனவரி 24ம் தேதி முதல் புதிய தினசரி பகல் நேர குளிர்சாதன ரயில் - தனியார் ரயில் இயக்க முன்னோட்டமா ?


நாடு முழுவதும் தனியார் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி சமீபத்தில் 150 ரயில்களை தனியார் மூலம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

அந்த தகவலின் படி தமிழகத்தில் 7 புதிய தினசரி ரயில்களை தனியார் மூலம் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே புதிதாக தினசரி பகல் நேர குளிர்சாதன ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் கோவையில் இருந்து தினசரி காலை 5 மணிக்கு புறப்பட்டு பகல் 12:45க்கு சென்னை சென்றடையும். பின்னர் சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45க்கு கோவை வந்து சேரும்.

06028 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல்
நிறுத்தம்
வருகை
புறப்பாடு
கோயம்புத்தூர்
---
5:00
திருப்பூர்
5:38
5:40
ஈரோடு
6:25
6:30
சேலம்
7:30
7:35
காட்பாடி
10:15
10:17
பெரம்பூர்
12:00
12:02
சென்னை சென்ட்ரல்
12:45
---
06027 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்
நிறுத்தம்
வருகை
புறப்பாடு
சென்னை சென்ட்ரல்
---
14:00
காட்பாடி
15:38
15:40
சேலம்
18:30
18:32
ஈரோடு
19:32
19:34
திருப்பூர்
20:20
20:22
கோயம்புத்தூர்
21:45
---

இந்த ரயிலில் 2 உயர் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளும், 5 அமரும் வசதி கொண்ட பெட்டிகளும், 2 ஜெனரேட்டர் பெட்டிகள் என 9 பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கொண்ட ரயில்கள் ஜனவரி 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை சிறப்பு ரயிலாக இயக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AC SPECIAL FARE TRAINS BETWEEN CHENNAI AND COIMBATORE
68 pairs of Daily AC Special fare trains will be run between Chennai and Coimbatore from 24th January 2020 to 31st March 2020 to clear extra rush of passengers in the sector as follows:-
Train No.06028 Coimbatore – Dr MGR Chennai Central Daily AC Special Fare Train
Train No:06028 Coimbatore – Chennai AC Special fare Train will  leave from Coimbatore Jn at 05.00 hrs and reach Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 12.45Hrs

Stoppages : Tiruppur ( Dep 05.40 hrs) Erode ( Dep 06.30 hrs) Salem ( Dep 07.35 hrs ) Katpadi (Dep 10.17 hrs) and Perambur (Dep 12.02 hrs)

Train No.06027 Dr MGR Chennai Central - Coimbatore Daily AC Special Fare Train
Train No: 06027 Chennai – Coimbatore AC Special fare Train will leave from Dr.MGR Chennai Central at 14.00 Hrs and reach Coimbatore Jn at 21.45 Hrs
Stoppages:Katpadi (Dep 15.40 hrs) Salem (Dep 18.32 hrs) Erode (Dep 19.34 hrs) and Tiruppur (20.22 hrs)

Composition: Two AC Executive Chair cars, Five AC Chair Cars and two Generator cum Luggage vans.

Advance reservations for above special trains will open at 08.00 hrs on 22nd January 2020


புதியது பழையவை