அரக்கோணம் சந்திப்பு - திருத்தணி இடையே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் 14 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்.
முழுமையாக ரத்து:

அரக்கோணம்-திருத்தணிக்கு ஜனவரி 27, 29, பிப்ரவரி 1, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.05, 5.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

திருத்தணி-அரக்கோணத்துக்கு ஜனவரி 26, 28, 31, பிப்ரவரி 2, 4, 7, 9, 11, 14, 16, 21, 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து:

மூா்மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு ஜனவரி 27, 29, பிப்ரவரி 1, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்-திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

திருத்தணி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு ஜனவரி 27, 29, பிப்ரவரி 1, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.40, காலை 6.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருத்தணி-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.