ஹைதராபாத் - திருச்சி - ஹைதெராபாத் இடையே அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி வழியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில்.
07609 திருச்சி - ஹைதெராபாத் சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து ஜனவரி 8, 15, 22, 29 மற்றும் பிப்ரவரி 5, 12, 19, 26ம் தேதியில் காலை 6:05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:10க்கு ஹைதெராபாத் சென்றடையும்.

இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, சித்தூர், பகலா, திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடுகுரல்ல, மீறியழகுடா, நலகொண்ட மற்றும் செக்கந்தராபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்கத்தில் 07610 ஹைதராபாத் - திருச்சி சிறப்பு ரயில், ஹைதராபாத்தில் இருந்து ஜனவரி 6, 13, 20, 27 மற்றும் பிப்ரவரி 3, 10, 17, 24ம் தேதிகளில் இரவு 10:20க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:15க்கு திருச்சி வந்து சேரும்.


புதியது பழையவை