எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே செங்கோட்டை, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்.
06015 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து , ஜனவரி 4, 11, 18, 25, பிப்ரவரி 1, 8, 15, 22, 29 மற்றும் மார்ச் 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


06016 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து ஜனவரி 5, 12, 19, 26, பிப்ரவரி 2, 9, 16, 23 மற்றும் மார்ச் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 6:15க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.