சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சென்னை புறநகர் ரயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம்இந்திய ரெயில்வே மும்பையில் கடந்த 2013-ம் ஆண்டு இது போன்று சுற்றுலா பயணிகள் மின்சார ரெயிலில் பயணிக்க, சுற்றுலா டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது. இதேபோல் தமிழகத்திலும் மின்சார ரெயில்களில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று திருவள்ளூர் பயணிகள் சங்கத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி இருந்தார். 


இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் விதமாகவும் புதிய டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என அளவில்லா பயணங்களை மேற்கொள்ளும் டிக்கெட்களை பெற்றுக்கொள்ள முடியும்.இரண்டாம் வகுப்பு கட்டணம் பெரியவர்களுக்கு

ஒரு நாள் டிக்கெட் - ₹70
மூன்று நாட்கள் டிக்கெட் - ₹115
ஐந்து நாட்கள் டிக்கெட் - ₹140

இரண்டாம் வகுப்பு கட்டணம் சிரியவர்களுக்கு

ஒரு நாள் டிக்கெட் - ₹45
மூன்று நாட்கள் டிக்கெட் - ₹70
ஐந்து நாட்கள் டிக்கெட் - ₹80

முதலாம் வகுப்பு கட்டணம் பெரியவர்களுக்கு

ஒரு நாள் டிக்கெட் - ₹295
மூன்று நாட்கள் டிக்கெட் - ₹480
ஐந்து நாட்கள் டிக்கெட் - ₹575

முதலாம் வகுப்பு கட்டணம் சிரியவர்களுக்கு

ஒரு நாள் டிக்கெட் - ₹190
மூன்று நாட்கள் டிக்கெட் - ₹285
ஐந்து நாட்கள் டிக்கெட் - ₹330

இந்த டிக்கெட்டுகளை மூன்று நாட்கள் முன்னதாக பெற்று கொள்ளலாம்.

முன்னதாக பெற்ற டிக்கெட்டுகளை பயணம் துவங்கும் ஒரு நாள் முன்னர் ரத்து செய்து கொள்ளலாம். ₹30 பிடித்தம் செய்யப்படும்.

இந்த சுற்றுலா டிக்கெட்டில் யாருக்கும் எந்த சலுகையும் இல்லை. 

நாள் முழுவதும் எந்த புறநகர் ரயிலிலும், எந்த ரெயில் நிலையத்திலும் இருந்து வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டை வைத்து மின்சார புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம்.

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக ரயில் செய்திகள் இதுகுறித்து பதிவு செய்த ட்வீட் இணைப்பு..