திருச்சி - சென்னை எழும்பூர் - திருச்சி இடையே கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
06026 திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்.


திருச்சியில் இருந்து டிசம்பர் 22 மற்றும் 24ம் தேதிகளில் இரவு 9மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

06025 சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில்.


சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23 மற்றும் 25ம் தேதிகளில் இரவு 11:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:50க்கு திருச்சி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை