அப்ரண்டீஸ் பயிற்சிகளுக்கு தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க ரயில்வே அறிவிப்பு

Image result for GOC Workshop"
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழிற் பயிற்றுநருக்கான 1765 பணியிடங்களில் 1500க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், திருச்சி பொன்மலை பணிமனையில் உள்ள 308 தொழிற்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பில் தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.