மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் தொடரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக மலை சேவை ரயில் சேவை திங்கள்கிழமையும் (டிசம்பா் 9) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Image result for ooty train hd picture
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையேயான மலை ரயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், குன்னூா் தாலுகாவில் நவம்பா் 15 ஆம் தேதி இரவு பெய்த மழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் 14 நாள்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

பின்னா் பருவ மழை தீவிரம் அடைந்ததால் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தொடா் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலம் உள்வாங்கியது.

இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் தொடா்ந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பணிகள் நிறைவடையாததால் திங்கள்கிழமையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


புதியது பழையவை