திருப்பூர் - ஈரோடு இடையே அமைந்துள்ள பெருந்துறை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக டிசம்பர் 3ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.


டிசம்பர் 3ம் தேதி

கோவையில் இருந்து காலை 9:05க்கு புறப்படும், 66602 கோவை - சேலம் மின்தொடர் ரயில், ஊத்துக்குளி - சேலம் இடையே ரத்து. இந்த ரயில் கோவை - ஊத்துக்குளி இடையே மட்டும் இயங்கும்.

சேலத்தில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்படும், 66603 சேலம் - கோவை மின்தொடர் ரயில், சேலம் - ஊத்துக்குளி இடையே ரத்து. இந்த ரயில் ஊத்துக்குளி - கோவை இடையே மட்டும் இயங்கும்.

13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், போத்தனுர் - திருப்பூர் இடையே சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.

12677 பெங்களூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், ஓமலூர் - பெருந்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 70 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.

12678 எர்ணாகுளம் - பெங்களூரு அதிவிரைவு ரயில், போத்தனுர் - திருப்பூர் இடையே சுமார் 26 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.

12676 கோவை - சென்னை சென்ட்ரல் 'கோவை அதிவிரைவு ரயில்,  கோவையில் இருந்து பிற்பகல் 3:15க்கு பதிலாக 3:50க்கு புறப்படும்.