சென்னை எழும்பூர் - விழுப்புரம் தடத்தில் நாளை(டிசம்பர் 24) காலை 11:25 முதல் பிற்பகல் 1:35 வரை ரயில் சேவையில் மாற்றம்.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 10:08க்கு புறப்படும், 40525 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே செல்லும்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 10:56க்கு புறப்படும், 40527 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே செல்லும்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:48க்கு புறப்படும், 40529 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் ரயில் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

செங்கல்பட்டில் இருந்து காலை 11:30க்கு புறப்படும் 40532 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் ரயில், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே ரத்து.  கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே மட்டும் இயங்கும்.

திருமால்பூரில் இருந்து காலை 10:40க்கு புறப்படும், 40804 திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்தொடர் ரயில், திருமால்பூர் - கூடுவாஞ்சேரி இடையே ரத்து. கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே இயங்கும்.

செங்கல்பட்டில் இருந்து காலை 12:20க்கு புறப்படும், 40534 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மட்டும் இயங்கும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை