சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் - சென்னை எழும்பூர் இடையே வருகின்ற 14ம் தேதி நீராவி சிறப்பு ரயில்.நீராவி பாரம்பரிய என்ஜினை கொண்டு தெற்கு ரயில்வே அவ்வப்போது சொரப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் வருகின்ற 14ம் தேதி சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் - சென்னை எழும்பூர் இடையே நீராவி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.


சிறப்பு ரயில் 1 - சென்னை எழும்பூரில் காலை 11மணிக்கு புறப்பட்டு கோடம்பாக்கம் சென்று மீண்டும் சென்னை எழும்பூருக்கு பகல் 12:15க்கு வந்து சேரும்.

சிறப்பு ரயில் 2 - சென்னை எழும்பூரில் பகல் 12:45மணிக்கு புறப்பட்டு கோடம்பாக்கம் சென்று மீண்டும் சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 2மணிக்கு வந்து சேரும்.


இந்த சிறப்பு ரயிலுக்கான கட்டணம் பின்வருமாறு
எழும்பூர் - கோடம்பாக்கம்
பெரியவர்களுக்கு ₹765
12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹565
வெளிநாட்டினருக்கு ₹1265

சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் - சென்னை எழும்பூர்
பெரியவர்களுக்கு ₹1265
12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹865
வெளிநாட்டினருக்கு ₹1765

இந்த சிறப்பு ரயிலில் 40 இருக்கைகள் மட்டுமே உள்ளது.

மேற்கொண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெற்று கொள்ளலாம்.